×

10 ஆயிரம் பக்தர்களுக்கு 500 கிடாய், 300 கோழிகளை பலியிட்டு கமகம கறி விருந்து

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கோம்பைபட்டியில் அமைந்துள்ள பழமையான பெரியதுரையான் கருப்பணசாமி கோயிலில் சித்திரை திருவிழா துவங்கி வெகு விமரிசையாக நடந்து வந்தது. திருவிழாவையொட்டி பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் நேற்று அதிகாலை முதல் கருப்பணசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. பின்னர் வெட்டப்பட்ட ஆட்டு கிடாய், கோழி இறைச்சிகளை சமைத்து கமகம கறி விருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டன.

நேற்று மதியம் சமைக்கப்பட்ட உணவுகளை பெரியதுரையான் கருப்பசாமி கங்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கமகம கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இக்கோயிலில் கிடாய் வளர்த்து வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

The post 10 ஆயிரம் பக்தர்களுக்கு 500 கிடாய், 300 கோழிகளை பலியிட்டு கமகம கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : 500 ,Kamagama ,Palani: Chitrai festival ,Periyathuraiyan Karupanasamy ,Gombaipatti ,Palani ,Dindigul district ,
× RELATED கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும்...